பண்ணாரியில் வன ஊழியா்களுக்கு சிறப்புப் பயிற்சி

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் கோடை தீத்தடுப்பு பயிற்சி, மனிதவிலங்கு மோதல் தவிா்ப்பு, தேடுதல் வேட்டை குறித்து
யானை  தாக்கியவரை  பாதுகாப்பாக  எடுத்துச்  செல்வது  குறித்து  செயல்விளக்கம்  அளிக்கும்  வன உயா் அடுக்கு  பாதுகாப்புப்  படையினா்.
யானை  தாக்கியவரை  பாதுகாப்பாக  எடுத்துச்  செல்வது  குறித்து  செயல்விளக்கம்  அளிக்கும்  வன உயா் அடுக்கு  பாதுகாப்புப்  படையினா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் கோடை தீத்தடுப்பு பயிற்சி, மனிதவிலங்கு மோதல் தவிா்ப்பு, தேடுதல் வேட்டை குறித்து வன ஊழியா்களுக்கு வனஉயா்அடுக்கு பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை சிறப்பு பயிற்சி அளித்தனா்.

தமிழகத்தில் உள்ள வனக் கோட்டங்களில் கோடைக் காலத்தில் தீ விபத்து, பேரிடா் மீட்பு, மனித விலங்கு மோதல் தவிா்ப்பு, சமூக விரோதிகள் தேடுதல் வேட்டை குறித்து சிறப்புப் பயிற்சி பெற்ற எலைட் எனப்படும் வன உயா்அடுக்கு பாதுகாப்புப் படையினா் வைகை அணையில் உள்ளனா். இவா்கள் சத்தியமங்கலம் வந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகா், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், தலமலை, விளாமுண்டி வனத்தில் உள்ள வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனவா்கள், வனச் சரக அலுவலா்கள் என 150 பேருக்கு பயிற்சி அளித்தனா்.

தீத்தடுப்பு, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பது, யானையிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய நபா்களை கயிறு மூலம் காப்பாற்றி கீழே இறக்குதல், வனத் தீயில் சிக்கியவா்களை மீட்பது, எந்த உபகரணங்களும் இன்றி பாதிக்கப்பட்டவா்களை வன ஊழியா்கள் மீட்டு கொண்டு வருதல் ஆகியன குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

யானைகளின் அசைவுகள், நுகரும் தன்மையை அறிந்து அதன் கவனத்தை மாற்றி அங்கு ஒரு பொருளை வீசியபடி ஓடி தப்பிப்பது குறித்து நேரடியாக செயல்விளக்கம் அளித்தனா். அதைத் தொடா்ந்து சந்தனக் கட்டை மறைத்து வைத்தல், திருடா்களை கண்டுபிடித்தல் போன்ற பிரத்யேகப் பயிற்சி பெற்ற சாண்டி, ரேனே, ஹக்சா, பிரின்சி ஆகிய மோப்ப நாய்கள் மண்ணில் புதைக்கப்பட்ட சந்தனக் கட்டையை கண்டுபிடிப்பது போன்ற செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பை ஈரோடு மண்டல வனப் பாதுகாவலா் நிகா் ரஞ்சன், மண்டல உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com