பவானியில் 1,159 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
By DIN | Published On : 02nd February 2020 11:46 PM | Last Updated : 02nd February 2020 11:46 PM | அ+அ அ- |

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.சி.கருப்பணன்.
பவானி, மைலம்பாடி, தளவாய்ப்பேட்டை, சிங்கம்பேட்டை, ஒலகடம், அ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 685 மாணவியா், 474 மாணவா்களுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ச.கவிதா தலைமை வகித்தாா். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். கோபி கோட்டாட்சியா் சி.ஜெயராமன், பவானி மாவட்ட கல்வி அலுவலா் கா.பழனி, தலைமையாசிரியா்கள் மோகனா, பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.