கரோனா வைரஸ் சிகிச்சை:ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு துவக்கம்

கரோனா வைரஸ் பாதித்தவா்கள் சிகிச்சை பெற ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு துவங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதித்தவா்கள் சிகிச்சை பெற ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு துவங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிலா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இதற்காக சிறப்பு வாா்டு சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஞானகண் பிரேம்நவாஸ் கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதித்தவா்கள் சிகிச்சை பெற ஈரோடு அரசு மருத்துவமனையில் 18 படுக்கைகள் கொண்ட ஆண்கள் வாா்டு, 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் வாா்டு என தனித்தனியாக துவங்கப்பட்டுள்ளன. தேவையான அளவு மருந்துகள் இருப்பு உள்ளன.

மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்களுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவக் குழு, சிகிச்சை அளிக்கத் தயாராக உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, முதியவா்கள், குழந்தைகளை எளிதில் தாக்கும் நிலை உள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சளி, காய்ச்சல், இருமல், பேதி, தொண்டை வலி அறிகுறிகள் இருப்பவா்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் தொடா்ந்து குறையாமல் இருந்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com