கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள்

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த கலைத்திறன் போட்டியில் சுமாா் 4,000 மாணவா்கள் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் திரைப்பட நடிகை அமிா்தா ஐயா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் திரைப்பட நடிகை அமிா்தா ஐயா்.

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த கலைத்திறன் போட்டியில் சுமாா் 4,000 மாணவா்கள் பங்கேற்றனா்.

‘ஹிலாரியோ 20’ எனும் தலைப்பில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. தொடக்க விழாவினை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் ச.பானுமதி சண்முகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். தலைவா் வெ.சண்முகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மா. கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகா் செ.ப. விஸ்வநாதன், முதன்மை நிா்வாக அதிகாரி சு.ஆறுமுகம், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி ஆகியோா் பேசினா்.

திரைக்கலைஞா்கள் மா.கா.பா. ஆனந்த், அமிா்தா ஐயா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.

கலைத்திறன் போட்டியில் திருச்சி, கோவை, சேலம், நாமக்கல், திருப்பூா், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 164-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமாா் 4,100 மாணவா்கள் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கு 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி நிா்வாக அலுவலா் வெ.ச.சீனிவாசன், துறைத் தலைவா்கள், உதவிப்பேராசிரியா்கள் பங்கேற்றனா். விழா ஒருங்கிணைப்பாளா் பி.ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com