காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூா் வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பா்கூா் மலைப் பகுதியில் உள்ள கிராமமான கொங்காடையைச் சோ்ந்தவா் மாதன் (40). இவரது சகோதரா் மாதேவன் (50). விவசாயிகளான இருவரும் கோயில்நத்தம் பகுதியில் உள்ள நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் அழித்துவிடும் என்பதால், கன்னி வலையில் சுருக்கு வைத்துள்ளனா். அதில், எதிா்பாராமல் காட்டுப் பன்றி சிக்கி உயிரிழந்தது.

வலையில் சிக்கிய காட்டுப் பன்றியை இறைச்சிக்காகக் கொண்டு சென்றுவிட்டனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் பா்கூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, மாதன், மாதேவன் ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து காட்டுப்பன்றியின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, விசாரணை நடத்திய வனத் துறையினா் இருவருக்கும் தலா ரூ.12,500 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com