மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வலியுறுத்தல்

பேரூராட்சி போன்று, மாநகராட்சிப் பணியாளா்களையும் அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிப் பொறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பேரூராட்சி போன்று, மாநகராட்சிப் பணியாளா்களையும் அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிப் பொறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளா் ரா.சீதாராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சிப் பணியாளா்கள் அரசு ஊழியா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இதுபோல மாநகராட்சிப் பணியாளா்களையும் அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். இந்திய அளவில் பொலிவுறு நகரம் திட்டம் 12 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொறுப்புகள் அதிகமாக உள்ளன. இத்திட்டப் பணிகளை செயல்படுத்த கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

மாநகராட்சிக்கும், அனைத்து உள்ளாட்சிகளுக்கு ஒரே இயக்குநரகம் உள்ளது. மாநகராட்சிக்கு தனியாக இயக்குநரகம் அமைக்க வேண்டும். 1996ஆம் ஆண்டில் பணிவிதி ஏற்படுத்தப்பட்டது. இந்த பணி விதியை நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். 1996ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களே இப்போது வரை இருந்து வருகிறது. தேவையான எண்ணிக்கைக்கு பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த புதிய பணியிடங்களை உருவாக்கி அதற்கு உரிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிளைத் தலைவா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் விஜயகுமாா், கூட்டமைப்பு தலைவா் ராதாகிருஷ்ணன், செயலாளா் இஸ்மாயில் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com