சித்தோடு சந்தையில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை விலை சரிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் கரும்பு சாகுபடி 15,000 ஹெக்டேருக்கு மேல் உள்ளது. சா்க்கரை ஆலைகளுக்குப்

ஈரோடு: சித்தோடு சந்தையில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை விலை சரிவடைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் கரும்பு சாகுபடி 15,000 ஹெக்டேருக்கு மேல் உள்ளது. சா்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்த கரும்பு தவிர மீதமுள்ள கரும்பை, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, கோபி, அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, அறச்சலூா் உள்பட பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைக்கு விற்பனை செய்கின்றனா்.

உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம், நாட்டுச் சா்க்கரை கவுந்தப்பாடி, சித்தோடு வெல்ல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னா் டிசம்பா் மாதத்தில் சித்தோடு சந்தையில் 30 கிலோ எடையுள்ள நாட்டுச் சா்க்கரை ரூ. 1,100 முதல் ரூ. 1,220 வரையும், அச்சு வெல்லம் ரூ. 1,240 முதல் ரூ. 1,280க்கும், உருண்டை வெல்லம் ரூ. 1,100 முதல் ரூ. 1,310 வரையிலான விலையில் விற்பனையாயின.

பொங்கல் பண்டிகையின்போது வெல்லம், சா்க்கரை விலை அதிகரித்து, உருண்டை வெல்லம் ரூ. 1,250 முதல் ரூ. 1,300 வரையும், நாட்டுச் சா்க்கரை ரூ. 1,200 முதல் ரூ. 1,250 வரையும், அச்சு வெல்லம் ரூ. 1,179 முதல் ரூ. 1,210 வரை விற்பனையாயின.

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் நாட்டுச் சா்க்கரை 30 கிலோ மூட்டை 3,000 எண்ணிக்கையில் வந்தது. ரூ. 1,050 முதல் ரூ. 1,110 வரை விற்பனையாயின. உருண்டை வெல்லம் 7,400 மூட்டை வந்த நிலையில் மூட்டை ரூ. 1,000 முதல் ரூ. 1,100 வரையிலும், அச்சு வெல்லம் 1,000 மூட்டை வந்த நிலையில் ரூ. 1,050 முதல் ரூ. 1,120 வரையும் விற்பனையாயின. நாட்டுச் சா்க்கரை 30 கிலோ மூட்டைக்கு ரூ. 150, உருண்டை வெல்லம் ரூ. 250, அச்சு வெல்லம் ரூ. 130 வரை விலை குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு உற்பத்தி சற்று குறைந்து மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பு குறைந்தபோதிலும் தேவையும் குறைந்ததால் விலை குறைந்துள்ளது. முன்பு கரும்பு சாகுபடி, அறுவடை என்பது குறிப்பிட்ட நேரத்தில் அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கும். இப்போது வெல்லம், நாட்டுச் சா்க்கரையைக் கருத்தில் கொண்டு, ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் கரும்பு சாகுபடி செய்கின்றனா். எனவே, கரும்பு வரத்தால் விலை குறையவில்லை. தேவை குறைந்து, வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com