சாயக்கழிவை வெளியேற்றிய 7 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 10th February 2020 10:35 PM | Last Updated : 10th February 2020 10:35 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோட்டில் சாயக்கழிவை வெளியேற்றிய 7 ஆலைகளின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனா்.
ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு, வீரப்பன்சத்திரம், கங்காபுரம், ஆா்.என்.புதூா் போன்ற பகுதிகளில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். விடுமுறை நாள் மற்றும் நள்ளிரவில், சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீரை 5 சாய, சலவை தொழிற்சாலைகள் வெளியேற்றியதை, உறுதி செய்தனா். அவற்றின் மின் இணைப்புகளை ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவுப்படி துண்டித்தனா். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்கிய இரண்டு நெகிழிப் தொழிற்சாலைகளின் மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
சாய, சலவை, தோல் ஆலைகள் முறையான பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்து, கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் எச்சரித்துள்ளாா்.