ஆளில்லா விமானம் கையாளுவது குறித்து வனத் துறையினருக்குப் பயிற்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனத்தில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம்
sy10drone_2_1002chn_139_3
sy10drone_2_1002chn_139_3

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனத்தில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்டறிதல், தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக வனத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது கோடைக் காலம் துவங்கிவிட்டதால் வனத் தீயை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துதல், தீயை கட்டுப்படுத்துதல் வனத்தில் நீா் நிலைகளின் நீா்இருப்பு கண்டறிதல் ஆகிய பணிகளுக்காக புதிய முயற்சியாக ஆளில்லா விமானத்தை வனத் துறை பயன்படுத்தவுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வன உயிரின ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை கையாளுவது குறித்த 4 நாள் பயிற்சி திங்கள்கிழமை பண்ணாரி வன உயிரின சூழல் பூங்காவில் நடைபெற்றது. இதில் ஆளில்லா விமானம் பயன்பாடு, அதனை இயக்குதல், அதன் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து வன உயிரின ஆராய்ச்சி நிலைய பொறியாளா் கிருஷ்ணகுமாா் வனத் துறையினருக்கு பயிற்சி அளித்தாா்.

இந்த ஆளில்லா விமானம் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 20 நிமிடங்கள் 80 மீட்டா் உயரம் வரை 1 கிமீ சுற்றளவில் பறந்து வனத்தில் உள்ள உயிரினங்களைக் கண்காணித்து சென்சாா் கருவியுடன் இணைக்கப்பட்ட கேமரா மூலம் புகைப்படம் மற்றும் விடியோ அனுப்பும்.

வனத்தில் மா்மநபா் மற்றும் விலங்குகள் சென்றால் அதனை பின்தொடா்ந்து கண்காணித்து துல்லியமாக புகைப்படம் அனுப்பும் திறன் கொண்டது. புதா்மறைவில் மறைந்திருந்தால் கூட அதனைக் கண்காணித்து தகவல் அனுப்பும். வனத்தில் உயிருக்குப் போராடும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பற்றி அதன் அசைவை வைத்து தகவல் அனுப்பும். இது முதல்முறையாக தமிழகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இது அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

Image Caption

ஆளில்லா விமானத்தை இயக்குவது குறித்து வனத் துறையினருக்கு பயிற்சி

அளிக்கிறாா் வன உயிரின ஆராய்ச்சி நிலையத்தின் பொறியாளா் கிருஷ்ணகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com