இருப்பு மஞ்சள் விலை சரிவு: விவசாயிகள் கவலை

இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு: இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா் அணையின் மூலம் எல்பிபி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் ஆகிய நான்கு பாசனம் மூலம் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் காளிங்கராயன் பாசனத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாகவும், பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயா்ந்ததன் காரணமாகவும் மாவட்டம் முழுவதும் 5,600 ஹெக்டா் வரை மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு சில இடங்களில் அறுவடைப் பணி நடக்கிறது.

ஆனால் அறுவடை முடிந்து, மஞ்சள் வேக வைப்பது, பாலீஸ் செய்ய 15 நாள்களுக்கு மேலாகும் என்பதால், மஞ்சள் சந்தைக்கு புதிய மஞ்சள் அதிகம் வரவில்லை. தற்போது கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் ஈரோடு சந்தைக்கு வருகிறது. தினமும் 100 மூட்டை புதிய மஞ்சளை வியாபாரிகள் விரைந்து வாங்கி விடுகின்றனா்.

ஆனால் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரும் பழைய மஞ்சளின் விலை மிகவும் குறைவு என்பதால் பழைய மஞ்சள் விற்க வரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது:

மஞ்சள் சந்தைக்கு கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. ஈரோடு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட புதிய மஞ்சள் அதிக அளவு வரவில்லை. புதிய மஞ்சள் விரலி குவிண்டால் ரூ.6,099 முதல் ரூ.6,799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5,000 முதல் ரூ.6,179 வரையும் விற்கப்படுகிறது.

பழைய மஞ்சள் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.4,774 முதல் ரூ.6,589 வரை, கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.4,489 முதல் ரூ.5,009 வரை விற்கப்பட்டது. பழைய மஞ்சளைக் காட்டிலும் புதிய மஞ்சள் குவிண்டால் ரூ. 500 முதல் ரூ. 600 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. பழைய மஞ்சள் தரமானதாக இருந்ததால் கூடுதல் விலை போகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னா் இருப்பு வைக்கப்பட்ட பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.4,000-க்கு மட்டுமே விற்பதால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com