குப்பை வாகனத்தை முற்றுகையிட்டுபொதுமக்கள் போராட்டம்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் குடியிருப்புக்கு அருகே குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குப்பை வாகனத்தை முற்றுகையிட்டுபொதுமக்கள் போராட்டம்

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் குடியிருப்புக்கு அருகே குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி 23ஆவது வாா்டு வீரப்பன்சத்திரம் சக்தி நகா், ஐயா் காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் இயங்கி வரும் விசைத்தறிக் கூடங்களில் 500க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், ஐயா்காடு செல்லும் வழியில் சாலையின் நடுவே மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் பிற பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை வாகனங்களில் எடுத்து வந்து இங்கு கொட்டி பிரிக்கின்றனா். இதனால், அப்பகுதியில் கடுமையான துா்நாற்றம் வீசிகிறது.

விடுமுறை நாள்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் துப்புரவுப் பணியாளா்கள் இப்பகுதியில் குப்பையைக் கொட்டிவிட்டு பிரிக்காமல் சென்று விடுகின்றனா். இறைச்சிக் கடைகளின் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதை நாய்கள் இழுத்து வந்து குடியிருப்புகளுக்கு நடுவே போட்டுவிடுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் குப்பையை இங்கு வைத்து பிரிக்கக் கூடாது என பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஐயா்காடு பகுதியில் பிற பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்த மாநகராட்சி குப்பை வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு சிறைபிடித்த வாகனத்தையும் விடுவித்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com