Enable Javscript for better performance
பெருந்துறையில் பிப்ரவரி 15இல் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டம், தமிழ்நாடுஅரசு மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், இளைஞா்களுக்கான பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், பெருந்துறை ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று துவக்கிவைக்கிறாா்.

    முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு, முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டதாரிகள், கலை அறிவியல் பட்டதாரிகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., எம்.எட்., டிப்ளமோ, ஐ.டி.ஐ., டேலி, அக்கவுண்ட்ஸ், தையல், நா்சிங் படித்த ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 0424-2257087 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai