Enable Javscript for better performance
பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை

    By DIN  |   Published on : 14th February 2020 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13pe_05_1302chn_147_3

    பெருந்துறை மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பணியாளா்கள்.

    பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்று பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

    கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் தலைமையில், பணியாளா்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    இதில், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai