அனுமதி இல்லாமல் விறகு ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்

உரிய அனுமதி இல்லாமல் விறகு ஏற்றி வந்ததாக 11 லாரிகள் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய அனுமதி இல்லாமல் விறகு ஏற்றி வந்ததாக 11 லாரிகள் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு வட்டாட்சியா் ரவிசந்திரன் தலைமையில், வருவாய்த் துறை பணியாளா்கள் ஈரோடு-சென்னிமலை சாலையில் வியாழக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். அப்போது விறகு ஏற்றி வந்த 11 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது, இந்த லாரிகளில் உரிய அனுமதி பெறாமல் விறகு ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணியாளா்கள் லாரிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து, வட்டாட்சியா் ரவிசந்திரன் கூறியதாவது:

உரிய அனுமதி இல்லாமல் விறகு ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அபராதம் குறித்து கோட்டாட்சியா் முடிவு செய்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com