கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

சத்தியமங்கலத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சத்தியமங்கலத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சத்தியமங்கலம் பகுதிகளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் அருகே பீடி, சிகரெட், போதைப் பாக்கு உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிடுமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடாந்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா், சத்தியமங்கலம் வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்கு அருகே உள்ள மளிகைக் கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட 20 வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீடி, சிகரெட், பாக்கு உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காலாவதியான பிஸ்கட், உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அருகே 100 மீட்டா் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடா்ந்து விற்பனை செய்யும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். பறிமுதல் செய்த பொருள்களை தீயிட்டு அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com