மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடிக்கு பட்ஜெட்டில் தீா்வு ஏதும் இல்லை. புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எவ்வித அறிவிப்பும் இல்லை. கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி அளவுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., ரயில்வே, எல்.ஐ.சி. போன்றவற்றை தனியாா் மயமாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது போன்றவற்றைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலாளா் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் செல்வராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com