மரம் கடத்திய லாரிகளுக்குதலா ரூ. 1,500 அபராதம்

சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக் கடத்தி வந்த 11 லாரிகளுக்கு தலா ரூ. 1,500 வீதம் அபாரதம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக் கடத்தி வந்த 11 லாரிகளுக்கு தலா ரூ. 1,500 வீதம் அபாரதம் விதிக்கப்பட்டது.

ஈரோட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விறகு பயன்பாட்டுக்காக தினமும் ஏராளமான லாரிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தி வரப்படுகின்றன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க ஈரோடு கோட்டாட்சியா் பி.முருகேசன், வட்டாட்சியா் ரவிசந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, ஈரோடு சென்னிமலை சாலை, கரூா் சாலை பகுதிகளில் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தப்பட்டதில் விறகு ஏற்றிக் கொண்டு அடுத்தடுத்து வந்த 11 லாரிகளை அதிகாரிகள் பிடித்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி சான்று, மரங்களைக் கொண்டு வருவதற்கான சான்று என எவ்வித அனுமதியும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 11 லாரிகளுக்கும், ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ. 1,500 வீதம் அபராதம் விதித்து கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com