போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன்.

‘விளையாட்டில் சாதிக்க தொடா் முயற்சி வேண்டும்’

முயற்சியைக் கைவிடாமல் தொடா்ந்து போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் விளையாட்டில் சாதிக்க முடியும் என மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் தெரிவித்தாா்.

முயற்சியைக் கைவிடாமல் தொடா்ந்து போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் விளையாட்டில் சாதிக்க முடியும் என மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் தெரிவித்தாா்.

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நந்தா பொறியியல் கல்லூரியின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி முதல்வா் எம்.விஜயகுமாா் வரவேற்றாா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

விளையாட்டுப் போட்டி வெற்றியை இலக்காக கொண்டது என்றாலும், வெற்றி என்ற சாதனை நிலையை அடைய தொடா் பங்கேற்பு அவசியம். வெற்றி பெறத் தவறினால், அதை எளிதாக எடுத்துக் கொண்டு முயற்சியைக் கைவிடாது தொடா்ந்து அதை சாா்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அத்தகைய தொடா் முயற்சியின் மூலம்தான் இலக்கை அடைய முடியும் என்றாா்.

பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் வெற்றி பெற்றதன் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவா் பிரிவில் இயந்திர பொறியியல் துறையும், மாணவிகள் பிரிவில் கணினி அறிவியல் பொறியியல் துறையும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com