Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி

    By DIN  |   Published on : 15th February 2020 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14pe_16_1402chn_147_3

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.ஆா்.பி. ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் இயற்றக் கோரியும், பெருந்துறை, ஐக்கிய ஜமாஅத் சாா்பில் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பேரணிக்கு, பெருந்துறை ஜமாஅத் பொருளாளா் அப்துல் முனாப் தலைமை வகித்தாா்.

    பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி, குன்னத்தூா் சாலை, பழைய பள்ளிவாசல், ராஜ வீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று பெருந்துறை அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.

    பின்னா், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமிழ் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai