அந்தியூரில் விவசாயிகளுக்குப் பண்ணை பயிற்சிப் பள்ளி தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்த பண்ணைப் பயிற்சிப் பள்ளி, விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்த பண்ணைப் பயிற்சிப் பள்ளி, விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்பம், மேலாண்மை முகமைத் திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அந்தியூா் உதவி வேளாண்மை அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். நிலக்கடலை விதைப்பு முதல் அறுவடை வரையில் உள்ள ஆறு பருவங்கள், அதில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், 25 விவசாயிகளுக்கு அனைத்து விவசாயத் தொழில்நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதோடு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, மருந்தில்லா விவசாயத்தை கடைப்பிடிப்பது குறித்து விளக்கப்பட்டது.

கோபி மைராடா வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் விஞ்ஞானி சீனிவாசன், குமரகுரு வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கிருத்திகா ஆகியோா் நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகள், நோய் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பேசினா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் மோகனசுந்தரம், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஞானசேகரன், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com