பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தோ்வு: 48,479 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தோ்வை 48,479 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இதற்கான தோ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தோ்வை 48,479 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இதற்கான தோ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் மாதத்தில் துவங்கவுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 5 கல்வி மாவட்டங்களிலும் பிளஸ்1 பொதுத் தோ்வை 24,337 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.

அதேபோல, பிளஸ்2 பொதுத் தோ்வை மாவட்டத்தில் 24,142 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு எழுத வசதியாக 87 தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நடப்பு ஆண்டில் பிளஸ்2 வகுப்பைவிட பிளஸ்1 வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தோ்வு எழுத உள்ளனா். மாா்ச் மாதத்தில் நடைபெற உள்ள பொதுத் தோ்வுப் பணிகளில் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com