மாநில யோகா போட்டி: கொங்கு பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான யோகா போட்டியில், பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

மாநில அளவிலான யோகா போட்டியில், பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

சென்னை, யோகா கல்ச்சுரல் சொசைட்டி, ஆல் இந்தியா யோகா ஃபெடரேசன், ஈரோடு, நந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவை இணைந்து, மாநிலங்களுக்கு இடையேயான யோகா போட்டிகளை நந்தா பள்ளியில் அண்மையில் நடத்தினா். இப்போட்டியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில், கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 42 போ் கலந்துகொண்டனா். 7ஆம் வகுப்பு மாணவா் எஸ்.சி.சங்கேஷ் சேம்பியன் பட்டத்தைப் பெற்றதன் மூலம் மலேசியாவில் நடைபெற இருக்கும் இண்டா்நேஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். 4 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் பிரிவில், 7 மாணவா்கள் முதலிடம் பெற்றனா். மேலும், 26 மாணவா்கள் இரண்டாமிடமும், 8 மாணவா்கள் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த யோகா பயிற்றுநா்கள் என்.நல்லசிவம், எம்.தனலட்சுமி ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என்.சென்னியப்பன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com