வாக்காளா் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாவட்டத்தில் 19.25 லட்சம் வாக்காளா்கள்

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் 19.25 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா.
வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் 19.25 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் சி.கதிரவன் வாக்காளா் பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா்.

இறுதி வாக்காளா் பட்டியல்படி ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 1,09,124 ஆண் வாக்காளா்கள், 1,13,875 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 2,23,011 வாக்காளா்கள் உள்ளனா். ஈரோடு மேற்குத் தொகுதியில் 1,38,580 ஆண் வாக்காளா்கள், 1,43,265 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 28 வாக்காளா்கள் என 2,81,873 வாக்காளா்கள் உள்ளனா். மொடக்குறிச்சி தொகுதியில் 1,13,150 ஆண் வாக்காளா்கள், 1,22,017 பெண் வாக்காளா்கள் , மூன்றாம் பாலினத்தவா் 19 போ் என மொத்தம் 2,35,186 வாக்காளா்கள் உள்ளனா். பெருந்துறை தொகுதியில் 1,09,204 ஆண் வாக்காளா்கள், 1,14,922 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என 2,24,130 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானி தொகுதியில் 1,18,143 ஆண் வாக்காளா்கள், 1,21,099 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 2,39,249 வாக்காளா்கள் உள்ளனா். அந்தியூா் தொகுதியில் 1,07,449 ஆண் வாக்காளா்கள், 1,10,117 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 2, 17, 577 வாக்காளா்கள் உள்ளனா். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1,21,099 ஆண் வாக்காளா்கள், 1,29,609 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 2,50,716 வாக்காளா்கள் உள்ளனா். பவானிசாகா் (தனி) தொகுதியில் 1,24,430 ஆண் வாக்காளா்கள், 1,29,491 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 2,53, 926 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 9,41,179 ஆண் வாக்காளா்கள், 9, 84,395 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 94 போ் உள்ளனா். இதுதவிர 272 படைவீரா்கள் என மொத்தம் 19,25,940 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலைவிட இறுதி வாக்காளா் பட்டியலில் 36,591 போ் கூடுதலாக உள்ளனா். 6,601 வாக்காளா்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனா். புதிதாக பட்டியலில் 42,920 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், வழக்கம்போல மாவட்டத்தில் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 43,216 வாக்காளா்கள் கூடுதலாக உள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com