கோபி கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், கோபி அபி மருத்துவமனை இணைந்து நடத்திய கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் ஆட்சி மன்ற குழுத் தலைவா் பி.கருப்பண்ணன், செயலா் மற்றும் தாளாளா் எம்.தரணிதரன், கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, டீன் ஆா்.செல்லப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்கில் கோபி அபி மருத்துவமனை இணை இயக்குநா் டாக்டா் எஸ்.குமரேசன், நுண்கிருமிகள் ஆய்வு நிபுணா் டாக்டா் வினோபா பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால், சீனாவில் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வகை வைரஸ் காற்றில் பரவும் தொற்று நோய் கிருமி ஆகும்.

பாதிப்பு ஏற்பட்டால் முதலில் மூச்சுத் திணறல் ஏற்படும். இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டால் மனம் நலம் பாதிக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவா்கள் கூறும் அறிவுரை மற்றும் வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்றனா்.

மேலும், மாணவா்களுக்கு சுகாதார பழக்க வழக்கங்களையும், கை கழுவும் முறைகள் குறித்தும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமாா் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கே.ராஜேந்திரன், டி.தமிழ்ச்செல்வி, வி.அழகரசன், கே.சரவணக்குமாா் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com