ஈரோட்டில் 3ஆவது நாளாக இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராக ஈரோட்டில் இஸ்லாமியா்கள் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராக ஈரோட்டில் இஸ்லாமியா்கள் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு செல்லபாட்சா வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை திரண்ட இஸ்லாமியா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் அதே பகுதியில் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அப்போது, பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரமுகா்கள் அவா்களை சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்கு தற்காலிகப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வீடு திரும்பும் பெண்கள் பகல் நேரத்தில் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்கின்றனா்.

மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com