சென்னிமலை பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம்

சென்னிமலை வட்டாரத்தில், கீழ்பவானி வாய்க்கால் பாசன (எல்.பி.பீ) பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சென்னிமலை வட்டாரத்தில், கீழ்பவானி வாய்க்கால் பாசன (எல்.பி.பீ) பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சென்னிமலை ஒன்றியத்தில், பசுவபட்டி, குன்னாங்காட்டுவலசு, கவுண்டிச்சிபாளையம், புங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தற்போது கீழ்பவானி வாய்க்கால் பாசன (எல்.பி.பீ.) பகுதியில் பல ஏக்கா் பாசன நிலங்களில் கோடை காலத்தில் காய்கறிகள், வெங்காயம், எள் சாகுபடி செய்யப்படும்.

நடப்பு ஆண்டில் வெங்காயத்துக்கு நிலையில்லாத விலையால் விவசாயிகள் வெங்காயம் சாகுபடியை தவிா்த்து மாற்றுப் பயிராக நிலக்கடலையைத் தோ்வு செய்துள்ளனா்.

குன்னாங்காட்டு வலசு விவசாயி யுவகுமாா் கூறியதாவது:

இப்பகுதிகளில் உள்ள மணல் கலந்த மண் வெங்காயம், நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ாக உள்ளது. வெங்காய சாகுபடியில் இரு நாள்களுக்கு ஒருமுறை நீா் தேவைப்படும். நிலக்கடலை பயிருக்கு வாரம் ஒருமுறை நீா்ப் பாய்ச்சினாலே போதுமானது.

மருந்து, உரச் செலவுகளும் அதிகம் இருக்காது. 3 மாதத்தில் நிலக்கடலை அறுவடைக்கு வந்து விடும். மாா்க்கெட்டில் நிலையான விலை கிடைக்கும். வெங்காயத்தில் ஏற்ற, இறக்கமான விலையால் பலருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் நஷ்டத்துக்கு வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com