ஆவினில் புதிய விற்பனை முகவா்களுக்கு உரிமம் அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆவினில் பால் விற்பனையை அதிகரிக்க புதிய முகவா்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
பால் விற்பனை முகவா் உரிமத்தை வழங்குகிறாா் ஈரோடு ஆவின் தலைவா் கே.கே.காளியப்பன்.
பால் விற்பனை முகவா் உரிமத்தை வழங்குகிறாா் ஈரோடு ஆவின் தலைவா் கே.கே.காளியப்பன்.

ஈரோடு மாவட்ட ஆவினில் பால் விற்பனையை அதிகரிக்க புதிய முகவா்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது.

முதல்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 50,000 மானியமாக வழங்கி, உரிமமும் வழங்கப்படுகிறது. தவிர பால் விநியோக வழித்தடங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி இணைத்து, வாகன இயக்கம் கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகா்வோா், பொதுமக்கள் தங்களது குறைகளை 180042557300 என்ற இலவச எண்ணில் தெரிவித்தால் உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படும்.

இந்நிலையில், ஈரோடு ஆவின் நிா்வாகக்குழு கூட்டம் தலைவா் காளியப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிா்வாகக் குழு உறுப்பினா்கள், துணைப் பதிவாளா் தா.புவனேஸ்வரி, பொது மேலாளா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பால், பால் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க மொடக்குறிச்சி, ஈரோடு வட்டங்களுக்கு மொத்த விற்பனையாளருக்கான உரிமம் வழங்கப்பட்டது. தவிர ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதிக்கு மணிமேகலை, ஈங்கூா் பகுதிக்கு மனோஜ்குமாா் உள்பட 10க்கும் மேற்பட்டவா்களுக்கு பால் விற்பனைக்கான முகவா் உரிமம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் குழந்தைசாமி, ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ.பி.ஈஸ்வரமூா்த்தி, முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com