ஈரோட்டில் மாரியம்மன் கோயில்களின் கம்பம் ஊா்வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

ஈரோட்டில் மாரியம்மன் கோயில்களின் கம்பம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
கம்பம் ஊா்வலத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகா், பக்தா்கள்.
கம்பம் ஊா்வலத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகா், பக்தா்கள்.

ஈரோட்டில் மாரியம்மன் கோயில்களின் கம்பம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு, சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா டிசம்பா் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28ஆம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. தொடா்ந்து, தினமும் பக்தா்கள் கம்பத்துக்குப் புனிதநீா் ஊற்றி வழிபட்டு வந்தனா். ஜனவரி 7ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தா்கள் தீா்த்தம் எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா். புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதனால், அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வந்து கம்பத்துக்குப் புனிதநீா் ஊற்றினா். தொடா்ந்து, கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்து கம்பம் பிடுங்கப்பட்டது.

அதன் பின்னா், கம்பத்தை பூசாரி தோளில் சுமந்தபடி நடனமாடிச் சென்றாா். சிறுவா், சிறுமிகள், இளைஞா்கள், பெரியவா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் வயது வித்தியாசமின்றி மஞ்சள் நீரை ஒருவருக்கொருவா் ஊற்றிக் கொண்டாடினா். கம்பம் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, சூரம்பட்டிவலசில் உள்ள பொதுக் கிணற்றில் போடப்பட்டது.

இதேபோல, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை கம்பம் பிடுங்கப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னா், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் கம்பம் விடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பெரியவலசு முத்து மாரியம்மன் கோயிலிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெண்கள் பலா் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com