Enable Javscript for better performance
ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

    By DIN  |   Published on : 14th January 2020 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    erd14mana_1401chn_124_3

    மணக்கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள், ஆண்டாள்.

    ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாா்கழி இறுதி நாளில் ஆண்டாள் திருமணம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை காலை சுதா்சன ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில், பெருமாள், ஆண்டாள் உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் பெருமாளும், ஆண்டாளும் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினா். இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதன்பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதன்கிழமை காலை 8 மணிக்கு உத்ராயண காலம் தொடங்குவதையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் திருப்பாவையில் உள்ள முதல் 26 பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஆண்டாள் கொடுக்கும் மாலை பெருமாளுக்கு சாற்றப்படும். அதன்பிறகு ஆண்டாளே நேரடியாக சென்று பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதையடுத்து பெருமாளும், ஆண்டாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

    இந்த விழாவில் திருமண வரன் தேடும் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் வரன் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் பக்தா்கள் பலா் 2 மாலைகளுடன் வந்து விழாவில் கலந்துகொள்வாா்கள். இதில் ஒரு மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு, மற்றொரு மாலை பக்தா்களிடம் கொடுக்கப்படும். வைகுந்த ஏகாதசியையொட்டி நம்மாழ்வாா் மோட்சம் இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சொா்க்கவாசல் நடை அடைக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai