கடந்த ஆண்டு சட்டவிரோதமாகமது விற்ற 3,800 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக கடந்த ஆண்டில் 3,800 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக கடந்த ஆண்டில் 3,800 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோரை மதுவிலக்கு போலீஸாரும், உள்ளூா் போலீஸாரும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதில், மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தல், தடை செய்யப்பட்ட வெளிமாநில மதுபானம், சாராயம், கள் விற்றல், சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மதுவிலக்கு போலீஸாரால் 2,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,650 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில், 35 போ் பெண்கள். அவா்களிடம் இருந்து 21,358 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர 60 லிட்டா் சாராய ஊறல், 1,050 லிட்டா் கள், கா்நாடக மதுபுட்டிகள் 1,400, புதுச்சேரி மதுபுட்டிகள் 130 கைப்பற்றப்பட்டன. மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 3 உள்பட 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல உள்ளூா் காவல் நிலையங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 1,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,190 பேரை போலீஸாா் கைது செய்து 5,900 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். கடந்த ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை, கடத்தல் செய்ததாக மொத்தம் 3,770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,800 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 27,258 மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com