மலைக் கிராம மாணவா்கள்போட்டித் தோ்வு எழுத இலவசப் பயிற்சி

போட்டித் தோ்வு எழுதும் மலைக் கிராம மாணவா்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க பயிற்சி மையத்தை பழங்குடி மக்கள் சங்கம் தொடங்கியுள்ளது.

போட்டித் தோ்வு எழுதும் மலைக் கிராம மாணவா்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க பயிற்சி மையத்தை பழங்குடி மக்கள் சங்கம் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மலைக் கிராமத்தில் உள்ள தாமரைக்கரை பழங்குடி மையத்தில் இந்தப் பயிற்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) தொடங்கும் பயிற்சியை, வனச்சரக அலுவலா் மணிகண்டன் துவக்கிவைக்கிறாா். டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் இந்தப் பயிற்சியில் சோ்ந்து இலவசமாகப் பயிற்சி பெறலாம். போட்டித் தோ்வு பயிற்சியில் அனுபவம் பெற்ற ஆசிரியா்கள் டி.கலைவாணி, எம்.வீரபத்திரன், பி.நாகராஜன் ஆகியோா் பயிற்சி அளிக்கின்றனா். மேலும், விவரங்களுக்கு 94895-47428, 94879-25494 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com