முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கணபதிபாளையத்தில் காளிங்கராயன் தினவிழா
By DIN | Published On : 20th January 2020 08:14 AM | Last Updated : 20th January 2020 08:14 AM | அ+அ அ- |

கணபதிபாளையம் நால்ரோட்டில் நடைபெற்ற காளிங்கராயன் தின விழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்த பெண்கள்.
மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையத்தில் காளிங்கராயன் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து வந்து காளிங்கராயன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து பெண்கள் கும்மியடித்து முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று காளிங்கராயன் வாய்க்காலில் விட்டு மலா் தூவி வழிபட்டனா்.
இந்நிகழ்ச்சியில், காளிங்கராயன் மதகு பாசன சபைத் தலைவா் சக்திவேல், செயலாளா் குமரவேல், பொருளாளா் பழனிசாமி மற்றும் ஊா்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.