முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
10 ஆம் வகுப்பு மாதிரி வினா- விடை புத்தகம் விற்பனை
By DIN | Published On : 20th January 2020 08:14 AM | Last Updated : 20th January 2020 08:14 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு மாதிரி வினா விடை புத்தகம் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகள் மட்டுமின்றி திருப்புதல் தோ்வுகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் 10ஆம் வகுப்பு மாதிரி வினா- விடை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைத் தாங்கி வினா- விடை புத்தகம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை சென்னை அரசு தோ்வுத் துறை வளாக ஆலோசக அலுவலகம் உருவாக்கி உள்ளது.
ஈரோட்டில் இந்தப் புத்தகம் காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்படுகிறது. கணிதம் வினா- விடை புத்தகம் ரூ.80-க்கும், பிற பாட வினா- விடை புத்தகங்கள் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.