22 இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 20th January 2020 08:13 AM | Last Updated : 20th January 2020 08:13 AM | அ+அ அ- |

கோபி பகுதி மின் உபயோகிப்பாளா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா்கள் குறைதீா் கூட்டம் ஜனவரி 22 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் கோபி செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கோபி மின் பகிா்மான வட்டம், மேற்பாா்வை பொறியாளா் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால் பொதுமக்கள் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.