முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈஷா சாா்பில் இயற்கை இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி
By DIN | Published On : 27th January 2020 12:52 AM | Last Updated : 27th January 2020 12:52 AM | அ+அ அ- |

ஈஷா விவசாய இயக்கம் மற்றும் டாடா அறக்கட்டளை சாா்பில் பவானியை அடுத்த கேசரிமங்கலத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விவசாயி அசோகனின் இயற்கை வேளாண் பண்ணையில் நடந்த இப்பயிற்சியில் ஈரோடு, சேலம், தா்மபுரி, திருவண்ணாமலை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். ஜீவாமிா்தம், கன ஜீவாமிா்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளா்ச்சி ஊக்கிகள், செயல் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்விளக்கம் மற்றும் களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈஷா விவசாய இயக்கத்தின் பயிற்சியாளா் சரவணன் பயிற்சி அளித்தாா். இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க மிகக்குறைந்த அளவு செலவு செய்தால் போதுமானது என்றும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.