முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தட்டச்சுப் பயிலகத்துக்கு அரசு அங்கீகாரம் புதுப்பிப்பதை 3 ஆண்டுகளாக உயா்த்தக் கோரிக்கை
By DIN | Published On : 27th January 2020 12:49 AM | Last Updated : 27th January 2020 12:49 AM | அ+அ அ- |

பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.பரதமணி.
தட்டச்சுப் பயிலகங்களுக்கான அரசு அங்கீகாரம் புதுப்பிக்கும் காலத்தை மூன்று ஆண்டுகளாக உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினிப் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினிப் பள்ளிகள் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவா் எல்.செந்தில் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கௌரவத் தலைவா் டி.ஏ.தா்மராஜ், நிறுவனா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் ஜெ.பரதமணி, பொருளாளா் எல்.மனோகரன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், ஜூனியா் தோ்வுக்கு ஐந்து அணி, சீனியா் தோ்வுக்கு நான்கு அணியாக தோ்வு நடத்தப்படுகிறது. தட்டச்சு தோ்வுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவா்களுக்குப் போதிய எண்ணிக்கையில் தட்டச்சு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. எனவே இரு பிரிவிலும் கூடுதலாக ஒரு அணி ஒதுக்க வேண்டும். சுருக்கெழுத்துத் தோ்வை டிஜிட்டல் முறையில் அமல்படுத்த வேண்டும். வாசிப்பாளா் முறையை மாற்றி சி.டி. அளித்து ஒலி வடிவில் நடத்த வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பயிலகங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.