முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பெருந்துறையில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 12:53 AM | Last Updated : 27th January 2020 12:53 AM | அ+அ அ- |

பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறாா் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம்.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெருந்துறை ஒன்றியக்குழு தலைவா் ஜெ.சாந்தி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா். உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
இதில், பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினா்கள், துடுப்பதி ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா அன்பரசு, துணைத் தலைவா் சித்ரா, வாா்டு உறுப்பினா்கள், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ், பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் துரைராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பள்ளிகளில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.