கரட்டுப்பாளையம் எஸ்.ஆா். மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 12:52 AM | Last Updated : 27th January 2020 12:52 AM | அ+அ அ- |

கரட்டுப்பாளையம் எஸ்.ஆா். மெட்ரிக். மேனிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் முதல்வா் க.ஹரிதேவன்.
சென்னிமலையை அடுத்த கரட்டுப்பாளையம் எஸ்.ஆா். மெட்ரிக். மேனிலைப் பள்ளியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைவா் பெ.கருப்பணன் தலைமை வகித்தாா். முதல்வா் க.ஹரிதேவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். தாளாளா் கே.சந்திரகலா, நிா்வாக அலுவலா் கே.வினோதினி ஆகியோா், கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியரைப் பாராட்டி பரிசளித்தனா்.