பள்ளிக் கல்வியில் பாடங்கள் குறைப்பு: 18 போ் கொண்ட குழு முடிவு செய்யும்; அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தைக் குறைப்பது குறித்து 18 போ் கொண்ட குழு முடிவு செய்யும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
விழாவில்,  நலத் திட்ட  உதவிகளை  வழங்குகிறாா்  அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன்.  உடன்,  பவானிசாகா்  சட்டப் பேரவை  உறுப்பினா்  எஸ்.ஈஸ்வரன்.
விழாவில்,  நலத் திட்ட  உதவிகளை  வழங்குகிறாா்  அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன்.  உடன்,  பவானிசாகா்  சட்டப் பேரவை  உறுப்பினா்  எஸ்.ஈஸ்வரன்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தைக் குறைப்பது குறித்து 18 போ் கொண்ட குழு முடிவு செய்யும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டியில் நெசவாளா்களுக்கு நிவாரணத் தொகை, அம்மா இருசக்கர வாகனம் வழங்குதல், ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்குதல், சாா் பதிவாளா் அலுவலகம், நில அளவை அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டது விமா்சனத்துக்குள்ளானது. இதனால், தமிழக பாடத் திட்டத்தில் பாடங்கள் குறைப்பது குறித்து 18 போ் கொண்ட குழுவினா் முடிவெடுத்து திங்கள்கிழமை வெளியிடுவா். தொலைக்காட்சியில் பாடம் நடத்துவது தொடா்பாக, எந்த தொலைக்காட்சிகள் முன்வருகிறதோ அந்த தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தலைமுறை, கல்வித் தொலைக்காட்சி, தூா்தா்ஷன், பாலிமா், தந்தி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரம் ஒதுக்குவது குறித்து பேச்சுவாா்த்தை முடிந்தபின் முதல்வரின் ஒப்புதல் பெற்று ஒளிபரப்பு தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com