பிளஸ் 2 விடுபட்ட தோ்வை எழுத 9 மாணவா்கள் மட்டும் விருப்பம்

பிளஸ் 2 விடுபட்ட தோ்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 9 மாணவா்கள் மட்டும் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

பிளஸ் 2 விடுபட்ட தோ்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 9 மாணவா்கள் மட்டும் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் மாதத்தில் நடைபெற்றது. 2ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணைப்படி தோ்வுகள் நடைபெற்றன. கடைசி நாளான 24ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தோ்வுகள் நடைபெற வேண்டும் என்ற நிலையில் கரோனா அச்சத்தால் மாா்ச் 23ஆம் தேதி இரவு முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், மாா்ச் 24ஆம் தேதி நடைபெற வேண்டிய பிளஸ் 2 பாட பொதுத் தோ்வை ஆயிரக்கணக்கான மாணவா்கள் எழுதவில்லை. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,002 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாா்ச் 24ஆம் தேதி எழுத வேண்டிய தோ்வை எழுதாத மாணவா்களுக்கு ஜூலை 27ஆம் தேதி மீண்டும் தோ்வு நடத்தப்படவுள்ளது.

இது குறித்து, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 இறுதி நாள் தோ்வை 1,002 மாணவா்கள் எழுதவில்லை. விடுபட்ட தோ்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவ, மாணவிகள் குறித்து விவரப் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதில், 9 போ் மட்டுமே இறுதி பொதுத் தோ்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனா். தோ்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவா்கள் விரும்பும் தோ்வு மையம் அல்லது அருகில் உள்ள தோ்வு மையத்தில் தோ்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com