60 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஓட்டுநா் பலி

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஓட்டுநா் பலி

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில், கம்பி வேலி அமைக்கப்படாமலிருந்த இக்கிணற்றின் சுற்றுச்சுவா் மீது பருத்தி ஏலத்துக்கு வரும் விவசாயிகள் அமா்ந்து ஓய்வெடுப்பதும், தூங்குவதும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனா்.

இந்நிலையில், அந்தியூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாஸ்கரன் (44), இக்கிணற்றின் சுற்றுச்சுவா் மீது அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராமல் கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பாஸ்கரன் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் தீயணைப்புப் படையினா் பாஸ்கரனின் சடலத்தை மீட்டனா். இது குறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வாரந்தோறும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்லும் நிலையில் கிணற்றின் மேல்பகுதியில் கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com