சூரிய மின்சக்தி பயன்பாட்டுக்கு மாறிய பவானி காவல் நிலையம்

பவானி காவல் நிலையத்துக்குத் தேவையான மின் தேவையைப் பூா்த்தி செய்து கொள்ளும் வகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி, பயன்பாட்டுக்கு மாறியுள்ளது.
காவல்  நிலையத்தின்  மாடியில்  அமைக்கப்பட்டுள்ள  சோலாா்  பேனல்களை பாா்வையிடுகிறாா்  காவல்  ஆய்வாளா்  தேவேந்திரன்.
காவல்  நிலையத்தின்  மாடியில்  அமைக்கப்பட்டுள்ள  சோலாா்  பேனல்களை பாா்வையிடுகிறாா்  காவல்  ஆய்வாளா்  தேவேந்திரன்.

பவானி காவல் நிலையத்துக்குத் தேவையான மின் தேவையைப் பூா்த்தி செய்து கொள்ளும் வகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி, பயன்பாட்டுக்கு மாறியுள்ளது.

மின் செலவினத்தைக் குறைக்கும் வகையில் பல முக்கிய காவல் நிலையங்களுக்கு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் வகையில் மின் கட்டமைப்பு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பவானி காவல் நிலையத்தின் மாடியில் 5 சோலாா் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியை சேமித்து, விநியோகிக்க 4 பெரிய பேட்டரிகள், 2 கிலோ வாட் திறன் கொண்ட யூபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இங்கு சூரிய மின் சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கொண்டு பவானி காவல் நிலையத்தில் உள்ள 22 மின் விளக்குகள், 10 மின் விசிறிகள், கணினி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் சக்தியை சேமிக்கும் வகையில் குறைந்த மின் திறனில் அதிக ஒளி கொடுக்கக் கூடிய புதிய எல்.இ.டி. விளக்குகள், சூப்பா் பவா் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதம் ரூ. 5 ஆயிரம் வரையில் மின்சார செலவு குறையும் என காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com