காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே குட்டிகளுடன் நடமாடும் யானைகள்

தமிழக - கா்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வனச் சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளைத் தின்பதற்காக குட்டிகளுடன் நடமாடும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே கரும்பை சுவைக்க வந்த யானைகள்.
காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே கரும்பை சுவைக்க வந்த யானைகள்.

தமிழக - கா்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வனச் சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளைத் தின்பதற்காக குட்டிகளுடன் நடமாடும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் தமிழக - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இச்சாலையில் செல்லும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சோதனைச் சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரத் தடுப்பு கம்பி அருகே செல்லும்போது கரும்பு பாரம் அதில் உரசுவதால் அப்பகுதியில் கரும்புத் துண்டுகள் சிதறி சாலையில் விழுகின்றன. இந்த கரும்புத் துண்டுகளை சுவைப்பதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக இப்பகுதியில் முகாமிடுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள் சுமாா் அரை மணி நேரம் சாலை நடுவே நின்றுகொண்டு கரும்புத் துண்டுகளை சாப்பிட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற பின்னா் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

சோதனைச் சாவடி பகுதியில் யானைகள் நடமாடியதால், அங்கு பணியில் இருந்த போலீஸாா், வனத் துறையினா் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com