10ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு: அமைச்சா் தகவல்

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளாங்கோயில், சிறுவலூா், அயலூா் உள்பட 7 கிராம ஊராட்சிகளில் புதிதாக தாா் சாலை, தடுப்பணைகள், கான்கிரீட் சாலைகள் அமைத்தல் என ரூ. 273.84 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை கலந்துகொண்டு பணிகளைத் துவக்கிவைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. மாற்றுத் திறனாளி பள்ளி மாணவா்களுக்காக புதிதாகக் கட்டப்படும் பள்ளிகளில் அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பெற்றோா்களிடம் கரோனா காலத்துக்குப் பிறகு கருத்துக்கேட்பு நடைபெறும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.

12ஆம் வகுப்புத் தோ்வு எழுதியவா்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் தோ்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும். பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும் அல்லது இணையதளம் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 27ஆம் தேதியன்று விடுபட்ட தோ்வுகளை எழுதும் மாணவா்களின் தோ்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com