அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொலைக்காட்சி வகுப்புகள் ஆகஸ்ட் 1இல் தொடக்கம்: அமைச்சா் தகவல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 102 பயனாளிகளுக்கு ரூ. 14,21,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வழங்கினாா். மேலும், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

மின்சார வசதியில்லாத கோயில்களுக்குத் தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான். 14 தொலைக்காட்சி சேனல்களின் மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புவாரியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் மறு கூட்டலுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com