தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று துவக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளைத் தலைவா் அன்பரசன், செயலாளா் மேசப்பன், பொருளாளா் செங்கோட்டையன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 200 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. ஈரோட்டில் 163 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது இந்த சங்கங்களில் இருந்து கடன் வழங்குவது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது.

தமிழக அரசு விவசாயிகள், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் இனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலம் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை மாற்றி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு அந்தந்த சங்கங்களே அதன் உறுப்பினா்களுக்கு நேரடியாக கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். வருமான வரித் துறையின் 2 சதவீதம் டி.டி.எஸ். பிடித்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு, நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் கரோனா காலத்தில் சிறப்பு காப்பீடு, போக்குவரத்துப் படி வழங்க வேண்டும். சங்கங்களில் அனைத்து நடைமுறைகளையும் கொண்ட கோா் வங்கி நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகைக் கடன் 6 சதவீதம் வட்டியில் வழங்க அனுமதிக்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பொதுமுடக்க காலம் முடியும் வரை இடைநிகழ்வு செலவுத் தொகை வழங்கப்பட வேண்டும். சங்கங்களில் புதிய மேலாண்மை இயக்குநா் பணியிடம் உருவாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். நகை ஏல குறைவுத் தொகையை நஷ்டக் கணக்கில் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

இதுபோன்று 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளா்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com