அந்தியூர் அருகே போதையில் ரகளை செய்த தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் சாவு
By DIN | Published On : 07th June 2020 08:06 PM | Last Updated : 07th June 2020 08:06 PM | அ+அ அ- |

அந்தியூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளியின் மீது வீசப்பட்ட கல் தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அந்தியூரை அடுத்த நகலூர் ஆலயம் தோட்டத்தைச் சேர்ந்தவர் அருளப்பன் மகன் பிரான்சிஸ் சேவியர் (44). செங்கல் சூளைத் தொழிலாளி. இவரது மனைவி மதலைமேரி (41). இவர்களுக்கு, 3 மகள், ஒரு மகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் உள்ள பிரான்சிஸ் நாள்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்கெனவே மது போதையிலிருந்த பிரான்சிஸ், மேலும் மது அருந்த பணம் கேட்டு மனைவி மதலைமேரியிடம் ரகளை செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியும், தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்தவர் கையில் கிடைத்த கல்லை எடுத்து பிரான்சிஸ் மீது வீசியுள்ளார்.
வீசப்பட்ட கல் எதிர்பாராமல் தாக்கியதில் காயமடைந்த பிரான்சிஸ் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.