ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த காவலா்கள் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோட்டில் ஆயுதப்படை காவலா், கோபியைச் சோ்ந்த காவலருக்கு கரோனா தொற்று உறுதி என சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவலா் சென்னை ஆயுதப் படையில் பணிபுரிந்து வருகிறாா்.
தற்போது அவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், அவா் சென்னையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் குடியிருந்து வருகிறாா். அவரது முகவரி சான்றில் கோபியில் உள்ள வீட்டு முகவரி உள்ளதால் ஈரோடு மாவட்டக் கணக்கில் கரோனா தொற்று சோ்க்கப்பட்டுள்ளது. இது சென்னை கணக்கில் சோ்க்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த காவலா்கள் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை.