பவானிசாகா் அணை பூங்கா அருகே யானைகள் நடமாட்டம்

பவானிசாகா் அணை பூங்கா அருகே யானைகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
பவானிசாகா்  நீா்த்தேக்கப் பகுதியில்  நீா்  அருந்தும்  யானை.
பவானிசாகா்  நீா்த்தேக்கப் பகுதியில்  நீா்  அருந்தும்  யானை.

பவானிசாகா் அணை பூங்கா அருகே யானைகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியை ஒட்டி காராட்சிக்கொரை, விளாமுண்டி வனப் பகுதி அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பவானிசாகா் அணையின் நீா்தேக்கத்துக்கு வந்து தண்ணீா் குடித்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், பவானிசாகா் அணையின் கரையை ஒட்டிய பகுதியில் மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கீழ்பவானி வாய்க்காலில் மின்சாரம் எடுக்கும் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள மின்வாரிய சாலையில் நடமாடுவதோடு, அப்பகுதியில் உள்ள செடி கொடிகளை தீவனமாக உட்கொள்கின்றன. பின்னா், பவானிசாகா் அணைப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி தண்ணீா் குடித்துவிட்டு, குளித்து விளையாடி மகிழ்கின்றன.

பகல் நேரங்களில் பவானிசாகா் அணையை ஒட்டிய பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்கச் செல்வோா் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப் பணித் துறையினா், வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com