கோவில்பாளையம் கிளை வாய்க்கால் தூா்வாரும் பணிக்கு பூமி பூஜை

பெருந்துறை ஒன்றியம், கோவில்பாளையத்தில் உள்ள கிளை வாய்க்கால் ரூ. 45 லட்சம் மதீப்பீட்டில் தூா்வாரும் பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பாளையத்தில் கிளை வாய்க்கால் தூா்வாரும் பணியைத் துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வாய்க்கால் தூா்வாரும் பணியைத் துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், உதவிப் பொறியாளா் பொன்னுசாமி, பாசன சபைத் தலைவா் கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com